மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கடையை அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றினைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 May 2026

மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கடையை அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றினைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..

 


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் எல்லையில் உள்ள 9674 எண் கொண்ட அரசு மதுபான விற்பனை கடை கொரடாச்சேரி - கமலாபுரம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. கண்கொடுத்தவனிதம் , நாலில்ஓன்று, விடயபுரம், முசிறியம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள், கொரடாச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த மதுபான கடையை அகற்ற கோரி வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து மனு அளித்தனர்.


 மேலும் கடந்த ஆண்டு மதுபான விற்பனை கடைக்கு எதிர் புறத்தில் பாண்டைவையாற்று கரையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மது போதையில் இருந்தவர்கள் கற்பழித்து கொலை செய்துவிட்டனர். மேற்படி சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த கடையினால் இதுவரை 32 பெண்கள் கணவரை இழந்து விதவையாக உள்ளனர் என்றும், அரசு மதுபான கடையை அகற்றிட பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்தும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.


 இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஆட்சியர் மோகனசுந்தரம் அவர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து இடையூறாக உள்ள அந்த மதுபான கடையை 15 தினங்களுக்குள் மதுபான கடையை அகற்றப்படவில்லை என்றால் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

உடனடியாக ஆட்சியர் அங்கிருந்தவாறே, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். 


பேட்டி: 

1. கல்யாணி - கிராம பொதுமக்கள்

2. இலக்கியா - கிராமவாசி.

No comments:

Post a Comment

Post Top Ad